சமீபகாலமாக ‘Gen Z’ என்று அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் மத்தியில் புதுவிதமான டிரெண்டுகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவில் சமீபத்தில் நெட்டிசன்களால் வேடிக்கையாக ஆரம்பிக்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party) நாடு கடந்து மிகப்பெரிய அளவில் பிரபலமானது.
இதனைப் பார்த்து அப்படியே காப்பியடித்த பாகிஸ்தான் நெட்டிசன்கள், தற்போது தங்கள் நாட்டிலும் ‘கரப்பான் பூச்சி அவாமி கட்சி’ மற்றும் ‘கரப்பான் பூச்சி அவாமி லீக்’ ஆகிய புதிய பெயர்களில் விநோதமான பாரோடி (Satirical) கட்சிகளை சோசியல் மீடியாவில் ஆரம்பித்துள்ளனர்.
இந்தியாவை பார்த்து அப்படியே அச்சுப்பிசகாமல் பாகிஸ்தானியர்கள் காப்பியடித்துள்ள இந்த விவகாரத்தை, தற்போதைய சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு பயங்கரமாக கிண்டல் செய்து கலாய்த்து வருகின்றனர்.
