சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், மும்பை வீரர் திலக் வர்மா அணிந்திருந்த விலை உயர்ந்த பிட்னஸ் வாட்ச் (Fitness Watch) உடைந்து கீழே விழுந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங்கின் போது 12-வது ஓவரில் இந்த வினோத சம்பவம் நிகழ்ந்தது. சிஎஸ்கே அணியின் ஆல்-ரவுண்டர் ஜேமி ஓவர்டன் வீசிய பந்தை, திலக் வர்மா ‘ஸ்கூப்’ (Scoop) ஷாட் ஆட முயன்றார். ஆனால், பந்து மட்டையில் படுவதற்குப் பதிலாக, திலக் வர்மாவின் இடது மணிக்கட்டில் பலமாகத் தாக்கியது.
𝗧𝗜𝗠𝗘 𝗢𝗨𝗧 ⌚🤐#TilakVarma’s wrist-watch, too, now has a #BiggestRivalry story to tell 👀#TATAIPL Revenge Week 2026 ➡️ #CSKvMI | LIVE NOW 👉https://t.co/wLcMjiCsSi pic.twitter.com/cCLwL6SYux
— Star Sports (@StarSportsIndia) May 2, 2026
பந்து தாக்கிய வேகத்தில், திலக் வர்மா தனது மணிக்கட்டில் கட்டியிருந்த ‘WHOOP’ ரக பிட்னஸ் பேண்ட் கழன்று மைதானத்தில் தூக்கி வீசப்பட்டது. சுமார் 28,000 ரூபாய் மதிப்பிலான அந்தச் சாதனம் தரையில் விழுந்ததைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பந்து பட்டதில் ஏற்பட்ட வலியால் திலக் வர்மா உடனடியாக மருத்துவ உதவியைக் கோரினார்.
விலை உயர்ந்த மின்னணு சாதனம் ஒன்று கிரிக்கெட் போட்டியின் இடையில் இவ்வாறு உடைந்து விழுவது அரிதான ஒன்று என்பதால், இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. “போட்டியின் மிகவும் விலை உயர்ந்த விக்கெட் இதுதான்” என ரசிகர்கள் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சில நிமிடங்கள் சிகிச்சைப் பெற்று ஆட்டத்தைத் தொடர்ந்த திலக் வர்மா, அடுத்த இரண்டு பந்துகளிலேயே 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
