தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நெகிடி மைதானத்தில் காயமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட போது, அதைப் பார்த்த அவரது தாயார் மிகுந்த அதிர்ச்சியடைந்தார். அந்த தருணத்தில் தன் மூச்சே நின்றுவிட்டது போல உணர்ந்ததாகவும், மிகுந்த பயத்தில் ஏபி டிவில்லியர்ஸை அழைத்து இந்தியாவில் இருப்பவர்களிடம் பேசி தன் மகனின் நிலை குறித்து அறிய உதவுமாறு கோரியதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
🚨“MY BREATH STOPPED WHEN MY SON GOT INJURED” – NGIDI’S FATHER THANKFUL TO INDIAN FANS & BCCI🚨
Lungi Ngidi’s mother said, “I was watching the match when my son got injured, and when he fell to the ground and was taken away in the ambulance, it felt like my breath stopped. We… pic.twitter.com/vTTOtN6Awr
— Muffatball vikrant (@Vikrant_1589) April 29, 2026
தன் மகனுடன் பேசும் வரை அந்த இரண்டு மணி நேரம் இரண்டு வருடங்கள் போலக் கழிந்ததாகக் குறிப்பிட்ட அவர், நெகிடிக்காகப் பிரார்த்தனை செய்த இந்திய ரசிகர்களுக்கும், அவருக்குச் சிறந்த சிகிச்சை அளித்த பிசிசிஐ (BCCI) மற்றும் மருத்துவக் குழுவினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்தியர்களின் இந்த அன்பைக் கண்டு நெகிழ்ந்து போயிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
