தமிழக அரசியல் வரலாற்றையே புரட்டிப் போடும் வகையில், AXIS MY INDIA வெளியிட்டுள்ள எக்சிட் போல் கணிப்பு ஒட்டுமொத்த தேசத்தையும் தமிழகத்தின் பக்கம் திரும்ப வைத்துள்ளது.
யாரும் எதிர்பாராத ஒரு மெகா திருப்பமாக, களம் கண்ட முதல் தேர்தலிலேயே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளதாக இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளாகத் தமிழக அரசியலை ஆதிக்கம் செலுத்தி வந்த திராவிடக் கட்சிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுக 92 முதல் 110 இடங்களைப் பெற்று இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படும் என்றும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வெறும் 22 முதல் 32 இடங்களை மட்டுமே பெற்று மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும் என்றும் இக்கணிப்பு கூறுகிறது. கோட்டையில் ‘தளபதி’ கொடி பறக்கப் போகிறதா அல்லது திராவிடக் கோட்டைகள் மீண்டும் நிமிருமா என்பது மே 4-ம் தேதி தெரிந்துவிடும் என்றாலும், ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு இப்போது இணையத்தில் அனலைக் கிளப்பி வருகிறது.
