பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் கடந்த 2022-ம் ஆண்டு வாங்கிய கேடிஎம் (KTM) பைக் மர்ம நபர்களால் திருடப்பட்டது.
பைக் திருடுபோய் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அந்த பைக்கின் இன்சூரன்ஸ் காலாவதி ஆகிவிட்டதாகவும், அதை புதுப்பிக்கும்படியும் மணிமேகலையின் மொபைலுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மணிமேகலை, “திருட்டுப்போன பைக்குக்கு இன்சூரன்ஸ் எக்ஸ்பைரி மெசேஜ் எனக்கு வருது! இன்சூரன்ஸ் கூட புதுப்பிக்காம அந்தப் பாவிப்பய எங்கேயோ வண்டிய ஓட்டிட்டு இருக்கான்..
ஆனா கண்ணுலையே சிக்க மாட்டேங்குறான்” எனத் தனது பாணியில் நகைச்சுவையாகப் புலம்பித் தள்ளியுள்ளார். தொலைந்து போன வண்டியை நினைத்து சோகமாகாமல், அதை ஜாலியாகப் பதிவிட்டுள்ள மணிமேகலையின் இந்த போஸ்ட் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
