நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் விறுவிறுப்பான ‘எல் கிளாசிகோ’ போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் 54 பந்துகளில் 101* ரன்கள் குவித்து விளாசிய சஞ்சு சாம்சன், தனது அதிரடியால் மட்டுமல்லாமல் ஒரு கலகலப்பான செயலால் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார்.

மும்பை அணியின் நமன் தீர் விக்கெட்டை வீழ்த்தியபோது, சிஎஸ்கே பந்துவீச்சாளர் அகீல் ஹொசைன் தனது அடையாளமான ‘மாஸ்க்’ (Mask) ஸ்டைலில் கைகளை வைத்து கொண்டாடினார்.

இதைப் பார்த்த சஞ்சு சாம்சன், ஓடி வந்து அதேபோல கைகளை முகத்தில் வைத்து அகீல் ஹொசைனை அப்படியே காப்பி அடித்து கிண்டல் செய்தார்.

மைதானத்தில் நடந்த இந்த க்யூட்டான தருணம் தற்போது வீடியோவாக வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையை நிலைகுலையச் செய்த அகீல் ஹொசைன், முன்னாள் சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ கொடுத்த ஆலோசனைகளே தனது வெற்றிக்குக் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

103 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற இந்த பிரம்மாண்ட வெற்றியால் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.