வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நடக்கும் திருமண நிகழ்வு, காலத்திற்கும் மறக்க முடியாத ஒரு திரில்லர் படக் காட்சி போல மாறினால் எப்படி இருக்கும்? கலிபோர்னியாவின் மோஜாவே பாலைவனத்தில் நடந்த ஒரு திருமணத்தில் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. அழகிய மலைகளின் பின்னணியில் மணமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருந்த போது, திடீரென நிலமே அதிரும் வகையில் ஒரு சத்தம் கேட்டுள்ளது.
“It’s giving me chills.”
A photographer captured the moment a couple’s wedding ceremony was unexpectedly interrupted by a rockslide in the Mojave Desert.
“I got to photograph a love that moves mountains,” photographer Lois Valdez wrote on TikTok. https://t.co/h4Bz2tsNGQ pic.twitter.com/f0yNfmbXsG
— ABC News (@ABC) April 22, 2026
அடுத்த சில வினாடிகளில், மணமக்களுக்குப் பின்னால் இருந்த மலைப்பகுதியில் இருந்து ராட்சத பாறைகள் சரிந்து கீழே விழத் தொடங்கின. திருமண புகைப்படக் கலைஞர் லோயிஸ் வால்டெஸ் எடுத்த இந்த வீடியோ, தற்போது ‘X’ தளம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், மலை சரிவதைப் பார்த்து மணமக்களும், விருந்தினர்களும் ஒரு நிமிடம் திகைத்துப் போவது தெளிவாகத் தெரிகிறது.
“காதல் மலையையே அசைக்கும்” என்ற பழமொழியை இந்தச் சம்பவம் நிஜமாக்கிவிட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த நிலச்சரிவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தத் திடீர் திருப்பத்திற்குப் பிறகு, திருமணச் சடங்குகள் திட்டமிட்டபடி இனிதே நடந்து முடிந்தன.
