மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மனதுக்கு நெருக்கமான சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார்.
அதில், “நானும் ஒரு சராசரி மனிதன் தானே” என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது பழைய திரைப்படங்களைப் பார்க்கும் போது இப்போதும் கண்கள் கலங்குவதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இதற்குக் காரணம், அந்தப் படங்களில் தன்னுடன் நடித்த பல கலைஞர்கள் இப்போது உயிருடன் இல்லை என்பதுதான்.
அவர்களைத் திரையில் பார்க்கும் போது தன்னை அறியாமலேயே கண்ணீர் வருவதாகக் கூறிய மோகன்லால், “நான் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், நானும் ஒருநாள் இந்த உலகை விட்டுப் போகப் போகிறவன் தான்” என்ற கசப்பான உண்மையை மிக எளிமையாகப் பேசியுள்ளார்.
மரணம் மற்றும் வாழ்க்கை குறித்த அவரின் இந்தத் தத்துவார்த்தமான பேச்சு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, “எவ்வளவு பெரிய உச்சத்தில் இருந்தாலும் என்னவொரு எளிமை” எனப் பலரையும் வியக்க வைத்துள்ளது.
