திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கிருத்திகா தங்கப்பாண்டியை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். “நிச்சயமாக முருகன் அருளால் திருப்பரங்குன்றத்தில் இந்த முறை தீபம் ஏற்றப்படும், மக்களின் வாழ்க்கையில் கிருத்திகா தங்கப்பாண்டி ஒளியேற்றுவார்” என அவர் உணர்ச்சி பொங்கப் பேசினார். அதிமுக-திமுக என மாறி மாறி வரும் களத்தில், தேமுதிகவின் இந்த ஆதரவுப் பேச்சு திமுக வேட்பாளருக்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பேசிய அவர், இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டுமென்றால் கிருத்திகாவின் வெற்றி அவசியம் என வலியுறுத்தினார். ஆன்மீகம் மற்றும் அரசியலை இணைத்து அவர் பேசிய விதம் அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரேமலதாவின் இந்த பிரச்சார வீடியோ இப்போது மதுரையில் செம ட்ரெண்டாகி வருகிறது.
