மும்பையில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து, காதலனுடன் ‘லிவ்-இன்’ முறையில் வாழ்ந்து வந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலனுடன் சேர்ந்து வாழ்ந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என நம்பி வந்த அந்தப் பெண்ணின் வாழ்க்கை, எதிர்பாராத விதமாக மரணத்தில் முடிந்துள்ளது.
மேலும்ந அவரது உடலில் காயங்கள் இருந்ததால், இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபராக அந்தப் பெண்ணின் காதலர் கருதப்படுகிறார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், அதன் உச்சகட்டமாக இந்த அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது போலீசார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். முறையற்ற உறவு மற்றும் குடும்பப் பிணக்குகளால் ஒரு இளம் பெண்ணின் உயிர் பறிபோனது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
