தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குத் தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஜனநாயகன் பட காட்சிகள் லீக் ஆனது துரதிர்ஷ்டவசமானது மற்றும் மிகுந்த கவலை அளிக்கிறது. சினிமா என்பது பலரின் நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் உருவாவது.
இதுபோன்ற திருட்டுத்தனமான செயல்கள் ஒட்டுமொத்த திரையுலகையும் பாதிக்கும். பைரசியை நிறுத்தி சினிமாவை காப்பாற்றுங்கள். படக்குழுவினருக்கு எனது முழு ஆதரவு உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.
படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும் வேளையில், இப்படி காட்சிகள் வெளியானது ரசிகர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
