ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் எதையும் நொடியில் வீடியோ எடுத்து விடலாம் என்பதற்கு உதாரணமாக, தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு 10 வினாடி வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கர் கே கலேஷ்’ (Ghar Ke Kalesh) என்ற எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு இளம்பெண் ஒரு இளைஞரைத் தரையில் தள்ளி வைத்து ஆவேசமாக அடிப்பதும், கத்துவதும் பதிவாகியுள்ளது.
அந்த இளைஞர் கீழே விழுந்து கிடக்க, அவரை விடாமல் அந்தப் பெண் தாக்கும் காட்சிகள் பார்ப்பவர்களைத் திகைக்க வைத்துள்ளன. இந்த வீடியோவின் பின்னணியில் சொல்லப்படும் தகவல் என்னவென்றால், அந்த இளைஞர் தனது காதலியை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் ஊர் சுற்றியபோது, காதலியிடம் கையும் களவுமாக வசமாக சிக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலி, பொது இடம் என்றும் பார்க்காமல் காதலனைத் தண்டித்துள்ளார்.
Street Kalesh Over Cheating (Girlfriend Catches Boyfriend Cheating, Pins Him Down on Street as Crowd Records) pic.twitter.com/Op3DOSR2mu
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 9, 2026
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “தவறு செய்தவனுக்குச் சரியான தண்டனை” என்றும், “ஏன் இதையெல்லாம் பொது இடத்தில் செய்கிறார்கள்?” என்றும் கலவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், சோஷியல் மீடியாவில் இதுதான் இப்போதைய டாப் ட்ரெண்டிங்!
