தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட 21 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்று கடைசி நாள் என்பதால், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதற்கிடையில், அரசியல் கட்சியினர் தங்கள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.இந்தச் சூழ்நிலையில், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தைச் சேர்ந்த பிச்சனூர் ஊராட்சி பொதுமக்கள் ஒட்டியுள்ள ஒரு போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுக்கு சாலை, குடிநீர், மின்விளக்கு மற்றும் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளைக் கடந்த 5 ஆண்டுகளாகச் செய்து தராததைக் கண்டித்து, தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக மக்கள் அறிவித்துள்ளனர்.

“வாக்குக் கேட்டு வேட்பாளர்கள் யாரும் ஊருக்குள் வர வேண்டாம்” எனத் தெரிவித்துள்ள இந்த போஸ்டர், வேட்பாளர்கள் மற்றும் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.