தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியரான சினேகன் – கன்னிகா தம்பதியினருக்கு கடந்த ஆண்டு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. இந்தக் குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் ‘காதல்’ மற்றும் ‘கவிதை’ என்று பெயர் சூட்டினார். இந்நிலையில், விக்னராஜ் என்பவர் சினேகனின் குழந்தைகள் குறித்து சமூக வலைதளத்தில் மிகவும் தரக்குறைவான மற்றும் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by Kannika Snekan (@kannikasnekan)

“>

இதைக் கண்டு கடும் கோபமடைந்த கன்னிகா, அந்த நபர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்ட கன்னிகா, ஒரு வயது குழந்தைகள் என்று கூட பார்க்காமல் தவறாகப் பேசியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அவதூறு பரப்புவோர் இனி எளிதாகத் தப்பிவிட முடியாது என்றும், நாகரிகமான விமர்சனங்களே ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நபருக்கும் ஒரு பெண் குழந்தை இருப்பதைச் சுட்டிக்காட்டிய கன்னிகா, தன் குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக உறுதியாகப் போராடுவேன் என்று தெரிவித்துள்ளார்.