இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடிக்கும் “LIK” (Love Insurance Kompany) படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பூக்கட்டும்’ (Pookattum) என்ற மெலோடி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல், கேட்ட உடனே முணுமுணுக்க வைக்கும் வகையில் அட்டகாசமாக அமைந்துள்ளது.

பாடலில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி இடையேயான ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ஏற்கனவே விக்னேஷ் சிவன் – அனிருத் கூட்டணி பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ள நிலையில், இந்தப் பாடலும் அந்தப் பட்டியலில் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.