சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திருத்தணி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக சத்யகுமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட காலமாக விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான சத்யகுமாருக்கு சீட் வழங்கப்பட்டதற்கு அப்பகுதி தவெக தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் வெளிப்பாடாக, இன்று வேட்பாளர் சத்யகுமார் மட்டும் துணைக்கு ஆட்கள் யாரும் இன்றி தனி ஒருவராக வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்

. அவர் தனித்து நிற்கும் இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது தவெக தொண்டர்களிடையே உள்ள உட்கட்சிப் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.