நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலைத் தனது முதல் அரசியல் களமாக அறிவித்துள்ளார். இந்நிலையில், பிரபல நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான சனம் ஷெட்டி, வரும் தேர்தலில் விஜய்க்குத் தான் வாக்களிக்கப் போவதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “விஜய்யைப் பற்றித் தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடே பேசிக் கொண்டிருக்கிறது. இதுவரை அவர் ஒரு தேர்தலைக்கூடச் சந்திக்காத போதிலும், கோடிக்கணக்கான மக்கள் அவருக்கு ஆதரவாக இருப்பது வியப்பளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
மேலும், ஒரு ரசிகையாகத் தானும் விஜய்க்கு வாக்களிக்க ஆவலுடன் காத்திருப்பதாக சனம் ஷெட்டி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் நுழைவிற்குப் பிறகு அவருக்கு இது போன்ற வெளிப்படையான ஆதரவுகள் அதிகரித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
