மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமேசான் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகள் முடக்கப்படலாம் என்ற அச்சம் உலகளவில் எழுந்துள்ளது. ஈரான் தனது ஏவுகணை மற்றும் சைபர் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதால், அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களின் தரவு மையங்கள் மற்றும் இணைய சேவைகள் இலக்கு வைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறிப்பாக, ஈரானின் இந்த சரமாரித் தாக்குதல்கள் டிஜிட்டல் கட்டமைப்புகளைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், சர்வதேச வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பு பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மற்றொருபுறம், பஹ்ரைனில் வெடித்துள்ள வன்முறை மற்றும் போராட்டங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கப் படைகள் மற்றும் தூதரகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள டிரம்ப், ஈரானின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பிராந்திய அமைதியை நிலைநாட்டவும் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளார். ஈரானின் தாக்குதல் மற்றும் பஹ்ரைன் பதற்றம் என இருமுனைத் தாக்குதலால் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தற்போது கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.