சமூக வலைதளங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் நம் இதயத்துடிப்பையே ஒரு நிமிடம் நிறுத்திவிடும். அப்படியான ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தான் இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு அழகான இளம்பெண் புலிகள் அடைக்கப்பட்டிருக்கும் பெரிய கூண்டுப் பகுதியை (Enclosure) மிகவும் நிதானமாகச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்.
கையில் தண்ணீர் குழாயை வைத்துக்கொண்டு, எந்தப் பயமும் இன்றி அவர் தனது வேலையில் மும்முரமாக இருக்கிறார். ஆனால், அடுத்த சில நொடிகளில் அவருக்குக் காத்திருந்த ஆபத்தை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பெண் சுத்தம் செய்து கொண்டிருக்கும்போதே, எதிர்பாராத விதமாகச் புலியின் பிஞ்சுரக் கதவு திடீரெனத் திறந்து கொள்கிறது.
He catches the moment the guard looks away.,
just enough time to slip through and disappear. pic.twitter.com/xTYG2IO2Xv— Muse🧚🏾♀️🦋 (@MuseIsOnX) March 24, 2026
எதிரே கர்ஜிக்கும் பசியோடு நின்றிருந்த புலியை பார்த்ததும் அந்தப் பெண் ஒரு நிமிடம் உறைந்து போனார். புலி மெல்ல மெல்ல அந்தப் பெண்ணை நோக்கி நகரத் தொடங்கிய அந்தத் தருணம், வாழ்வா சாவா என்ற போராட்டமாக மாறியது. ஆனால், அந்த இக்கட்டான சூழலிலும் பதற்றமடையாத அந்தப் பெண், தனது சாமர்த்தியத்தைப் பயன்படுத்தினார்.
கையில் இருந்த தண்ணீர் குழாயைத் திடீரெனச் புலியின் முகத்தை நோக்கித் திருப்பி, தண்ணீரை வேகமாகப் பீய்ச்சி அடித்தார். முகத்தில் தண்ணீர் பட்டதும் சிங்கம் நிலைதடுமாறி சில நொடிகள் பின்வாங்கியது.
அந்தச் சிறு இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்ட பெண், மின்னல் வேகத்தில் கூண்டுக்கு வெளியே ஓடி வந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.
ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அந்தச் புலிக்கு அவர் இறையாகியிருப்பார். இந்தப் பெண்ணின் தைரியத்தையும், சமயோசித புத்தியையும் பாராட்டி நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
