கோவாவிற்குச் சுற்றுலா வந்த 22 வயது இளைஞர் ஒருவர், தனது விலையுயர்ந்த பார்ச்சூனர் காரைக் கடல் நீரில் கழுவ ஆசைப்பட்டு, இப்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் சிங் ராவத் என்ற அந்த இளைஞர், கோவாவின் வாகத்தோர் கடற்கரைக்குத் தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

அலையடிக்கும் கடல் நீரை வைத்து காரைச் சுத்தப்படுத்த நினைத்த அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அலையின் வேகத்தில் கார் மணலில் மிக மோசமாகச் சிக்கிக் கொண்டது.

கடல் நீர் உள்ளே புகுந்ததில் காரின் இன்ஜின் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்கள் முற்றிலும் பழுதடைந்தன. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடைசியில் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்தே அந்த காரை மீட்டெடுக்க முடிந்தது. கடற்கரையில் வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்பதால், அஞ்சுனா போலீசார் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜாலியாகச் சுற்றுலா வந்துவிட்டு, இப்போது லட்சக்கணக்கில் நஷ்டத்தையும், போலீஸ் வழக்கையும் சுமந்து கொண்டு அந்த இளைஞர் தவித்து வருகிறார்.