மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஈரான் நாடு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

எப்போதும் நெருங்கிய நட்பு நாடாகத் திகழும் ஈரான், தற்போதைய இக்கட்டான சூழலில் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து கைவிட்டுள்ளது.

போர் காரணமாக ‘ஸ்டிரைட் ஆஃப் ஹார்முஸ்’ கடல் வழிப்பாதை மூடப்பட்டுள்ளதால் உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்கா சில சலுகைகளை அறிவித்ததைத் தொடர்ந்து இந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்கத் தயாரானது. ஆனால், சர்வதேச நாடுகளுக்கு விநியோகம் செய்யத் தங்களிடம் கூடுதல் எண்ணெய் இருப்பு இல்லை எனக் கூறி ஈரான் கைவிரித்துவிட்டது.

தனது தேவையில் 90 சதவீத எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு இது ஒரு பேரிடியாகக் கருதப்படுகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.