தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜகவை நோக்கி சரமாரி விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்று ஆணித்தரமாகக் கூறியுள்ள ஓபிஎஸ், அதிமுகவின் தற்போதைய நிலையை எண்ணி வேதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஒரு காலத்தில் கம்பீரமாக இருந்த அதிமுகவை, இன்று தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு காத்துக் கிடக்கக் கூடிய அவல நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளிவிட்டதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஜெயலலிதா காலத்துப் பெருமைகளை இபிஎஸ் சிதைத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணி அவசியம் என்பதையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
