தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமார், தனது நீண்ட நாள் கனவான கார் ரேஸிங் விளையாட்டில் மீண்டும் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளார்.
இதற்காகத் தனது சொந்த ‘ஏகே ரேஸிங்’ (AK Racing) அணியை உருவாக்கியுள்ள அவர், இத்தாலியில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற ‘க்ரெவெண்டிக்’ (Creventic) ஐரோப்பிய கார் ரேஸிங் தொடரில் பங்கேற்கத் தனது அணியுடன் இத்தாலி சென்றுள்ளார்.
நாளை இந்தத் தொடரின் முதல் போட்டி விறுவிறுப்பாகத் தொடங்கவுள்ள நிலையில், ரேஸிங் சூட் அணிந்து முழுமையான ‘ரேஸிங் மோட்’-ல் இருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
அஜித் குமார் தனது சொந்த அணியுடன் ஒரு சர்வதேசத் தொடரில் பங்கேற்பது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
