2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்திக்கும் எனச் சில ரகசிய சர்வே முடிவுகள் வந்துள்ளதாகவும், அதனால் எப்படியாவது விஜய்யைத் தங்கள் பக்கம் இழுத்துச் சீட்டுகளை அள்ள பாஜக துடிப்பதாகவும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசியுள்ள நபர், “பாஜக மேலிடத்திலிருந்து விஜய்க்குப் பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. விஜய்யின் பலத்தைச் சேர்த்துக் கொண்டால் மட்டுமே கூடுதலாகச் சில தொகுதிகளில் ஜெயிக்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். அதனால்தான் இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் நடக்கிறது” எனப் பொளேர் எனப் போட்டு உடைத்துள்ளார்.
Without Thalapathy BJP can't win🔥🔥
~ DMK Spokesperson TKS இளங்கோவன்ஆனா Remember 💯💯#BJP மிரட்டலுக்கு #ThalaivarVijay அடிபணிய மாட்டார்.
தோல்வி பயத்தில் #DMK மற்றும் பிஜேபி நடத்தும் நாடகம் இது ⁉️@TVKVijayHQ #TVKForTN #தமிழகவெற்றிக்கழகம் #தவெக pic.twitter.com/PqZMo8wA6I— TVK 𝚂qυα∂💥 (@TVKVijay24x7) March 15, 2026
ஏற்கனவே சிபிஐ விசாரணை, கூட்டணிப் பேச்சுவார்த்தை எனப் பல புகார்கள் சுற்றி வரும் நிலையில், “பாஜகவின் தோல்வி பயமே விஜய்யின் மீது பாயக் காரணம்” என அந்த நபர் கூறியிருப்பது விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “விஜய் என்கிற ஒற்றை ஆளுமையை வளைக்க டெல்லி பஞ்சாயத்தே இறங்கியிருக்கிறது” என்கிற ரீதியில் சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.
