தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு குறித்த செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து நடிகர் ஸ்ரீமன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பெட்ரோல் பங்கிற்குச் சென்றபோது மக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு தங்கள் வாகனத்தின் டேங்க் முழுவதையும் நிரப்புவதைப் பார்த்த அவர், இதனால் அவசரத் தேவை இருப்பவர்களுக்கு எரிபொருள் கிடைக்காமல் போகும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, ஒரு கர்ப்பிணிப் பெண்ணை உட்கார வைத்துக்கொண்டு ஒரு நபர் பெட்ரோல் இன்றி பைக்கைத் தள்ளிச் சென்ற காட்சியைக் கண்டு தான் மிகுந்த வேதனை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சின்ன பிரச்சனை என்றாலே பயந்துபோய் பொருட்களைச் சேமித்து வைப்பதையும், வதந்திகளைப் பரப்புவதையும் தவிர்த்து, மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஸ்ரீமன் அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
