திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த ரவி மோகன் – ஆர்த்தி ஜோடியின் விவாகரத்து விவகாரம், கடந்த 2024-ம் ஆண்டு முதல் இன்று வரை ஓயாத சர்ச்சையாக நீடித்து வருகிறது.

15 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டு பிரிந்த ரவி மோகன், தனது தோழி கெனிஷாவுடன் நெருக்கமாக இருப்பதாக எழுந்த வதந்திகள் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பின.

இதுகுறித்து ஆர்த்தியும் ரவி மோகனும் மாற்றி மாற்றி கருத்துக்களைப் பகிர்ந்து வந்த நிலையில், தற்போது தன்னை விமர்சிப்பவர்களுக்கு ரவி மோகன் மிகக் கடுமையான பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.

அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், “நான் இப்போதுதான் என் வாழ்க்கையை அமைதியான முறையில் கட்டமைத்து வருகிறேன். எப்போதுமே பெண்கள் செய்வதுதான் சரி என்று குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்;

உண்மையில் இந்த விவகாரத்தில் ஆண்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அதை நமது நீதித்துறையே ஒப்புக்கொள்கிறது” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒரு மனிதனை நிம்மதியாக வாழவிடுங்கள்; உங்களின் கேவலமான எண்ணங்களை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்.

என் மனசாட்சிக்குத் தெரியும் நான் யாருக்கு என்ன செய்தேன் என்று; ஒருநாள் உங்களுக்கே உண்மை புரியும்” எனச் சீறியுள்ளார். ரவி மோகனின் இந்த ‘ஆண்கள் தான் பாவம்’ என்கிற கருத்து, விவாகரத்து விவகாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.