மகாராஷ்டிரா மாநிலம் பீட் (Beed) மாவட்டத்தில், கேட்பாரற்று கிடந்த ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை பதைபதைக்க வைக்கும் நரகமாக மாறியுள்ளது. 21 வயதான திருமணமான ஒரு பெண், கடந்த ஒரு மாத காலத்திற்குள் மூன்று வெவ்வேறு நபர்களுக்குப் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண்ணை, இடைத்தரகர்கள் ஒரு கும்பலிடம் விற்றுள்ளனர். அங்கிருந்து தப்பிக்க முயன்ற அந்தப் பெண்ணை, அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களுக்குக் கடத்திச் சென்று, ஒரு பொருளைப் போல ஏலம் விட்டுள்ளனர்.

ஒவ்வொரு முறை விற்கப்படும்போதும் அந்தப் பெண் கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கும், உடல் ரீதியான சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஒரு வழியாக அந்த நரகத்திலிருந்து தப்பித்து வந்த அந்தப் பெண், காவல் நிலையத்தில் அளித்த புகார் ஒட்டுமொத்த மகாராஷ்டிராவையும் உலுக்கியுள்ளது.

“ஒரு மாதத்தில் மூன்று முறை நான் விற்கப்பட்டேன், ஒவ்வொரு நிமிடமும் நான் செத்துப்பிழைத்தேன்” என அவர் கண்ணீருடன் கூறிய வாக்குமூலம் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக உள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.