திரைத்துரை மட்டுமின்றி நிஜ வாழ்விலும் எப்போதும் கலகலப்பாகவும், அதே சமயம் நறுக் என்ற விமர்சனங்களை வைப்பதிலும் பெயர் போனவர் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், நடிகை திரிஷா குறித்து விளையாட்டாகப் பேசப்போய் அது இப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா ஏற்று நடித்த ‘குந்தவை’ கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பார்த்திபன், “இந்த குந்தவையை கொஞ்ச நாள் வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கறது (அமர்த்தி வைப்பது) நல்லது; அவர் வெளியே வராமல் பார்த்துக்கொண்டால் நிறைய பிரச்சனைகள் உண்டாகாமல் தடுக்கலாம்” என்று தனது பாணியில் சிலேடையாகக் கூறியுள்ளார்.
மேலும், “சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதையைச் சொல்லாமல் இருப்பதே நல்லது” என்று திரிஷாவை ஒரு கவிதைக்கு நிகராக வர்ணித்து அவர் பேசியுள்ளார்.
பார்த்திபன் வழக்கம்போல திரிஷாவின் அழகைப் பாராட்டி நகைச்சுவையாகப் பேசினாலும், ஒரு பெண்ணை “வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கறது (அமர்த்தி வைப்பது) நல்லது” என்று அவர் குறிப்பிட்டது திரிஷா ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
