மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், கல்வித் தகுதியின் அடிப்படையில் பொதுமக்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி அமல்படுத்தியுள்ளார். அதன்படி இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு வரை முடித்திருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.  தகுதியுள்ள நபர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,500 நிதி உதவி வழங்கப்படும் இந்தத் திட்டத்திற்காக இதுவரை சுமார் 1 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். மார்ச் 7-ஆம் தேதி முதல் இத்திட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில், மம்தா பானர்ஜியின் இந்த அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.