தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான தனிப்பட்ட குடும்ப விவகாரங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இது குறித்து ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்களுக்குத் தீவிர விஜய் ஆதரவாளரான திவாகர் (Physio Diwakar) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“கணவன் – மனைவிக்குள் ஆயிரம் சண்டைகள் வரலாம், அவர்கள் இன்று பிரிந்தாலும் நாளை ஒன்று சேரலாம்; ஆனால், அதைப் பற்றி விமர்சிக்க யாருக்குமே உரிமை கிடையாது” என அவர் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். குறிப்பாக, யூடியூப் தளங்களில் பேட்டி அளிக்கும் பயில்வான் ரங்கநாதன் மற்றும் பாடகி சுசித்ரா ஆகியோரின் கருத்துகள் தனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“>

“விஜய் சார் மாணவர்களுக்குப் படிப்பு குறித்தும், ஒழுக்கம் குறித்தும் நல்ல அறிவுரைகளை மட்டுமே வழங்கி வருகிறார். அப்படிப்பட்ட ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையில் புகுந்து, ஏதோ அவர் வீட்டு மாடியில் குடியிருந்தது போல அரைகுறைத் தகவல்களை வைத்துக்கொண்டு வதந்தி பரப்புவது கண்டிக்கத்தக்கது” எனத் திவாகர் சாடியுள்ளார். மேலும், பிசியோதெரபி படிப்பு குறித்த பயில்வான் ரங்கநாதனின் தவறான புரிதலையும் சுட்டிக்காட்டிய அவர், கமர்ஷியல் லாபத்திற்காகப் பிரபலங்களின் குடும்பத்தைப் பலிகடா ஆக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

பிக்பாஸ் ஜூலி போன்றவர்கள் விஜய் ரசிகர்கள் மிரட்டுவதாகக் கூறுவதையும் குறிப்பிட்ட திவாகர், “விஜய் சார் எப்போதும் வன்முறையை ஆதரிப்பதில்லை; சமூக வலைதளங்களில் வரும் தேவையற்ற கமெண்டுகளுக்கு அவர் எப்படிப் பொறுப்பாக முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.