வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆவேசமாக உரையாற்றிய நடிகர் விஜய், ஆளும் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார்.
“உங்களை உங்கள் இடத்திற்கே வந்து சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை, ஆனால் ஆளும் கட்சியின் சூழ்ச்சியால் அது தற்போதைக்குத் தள்ளிப் போயுள்ளது” என்று குறிப்பிட்ட அவர், “நிச்சயமாக நமது ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் நான் நேரடியாக வந்து உங்களைச் சந்திப்பேன்” என உருக்கமான வாக்குறுதி ஒன்றை வழங்கினார்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை “தமிழக மக்களுக்கும், ஊழல் ஆட்சிக்கும் நடக்கும் போர்” என்று வர்ணித்த விஜய், திமுக அரசை வீழ்த்தத் தொண்டர்கள் இப்போதே தயாராக வேண்டும் என அறைகூவல் விடுத்தார். விஜய்யின் இந்த அதிரடிப் பேச்சு, வேலூர் மண்ணைத் தாண்டியும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
