சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பகுதியில், ஆட்டோவில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவரிடம் வாலிபர் ஒருவர் அநாகரீகமாக நடந்துகொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்தப் பெண் தன்னைத் தொட வேண்டாம் என்றும், விலகிச் செல்லுமாறும் பலமுறை எச்சரித்தும், ஆவேசத்தில் அறையக் கை ஓங்கியும் கூட, அந்த நபர் சிறிதும் அச்சமின்றி அத்துமீறிச் செயல்பட்டுள்ளார்.

“>

 

அந்தப் பெண்ணின் ஆடைகளை இழுப்பதும், தகாத முறையில் பேசுவதுமாக அந்த வாலிபர் செய்த சேட்டைகளைக் கண்டு அங்கிருந்தவர்கள் மிரண்டு போயுள்ளனர். இந்த ஒட்டுமொத்தக் கொடூரத்தையும் அவ்வழியே சென்ற ஒருவர் தனது செல்போனில் ரகசியமாகப் படம்பிடித்துள்ள நிலையில், தற்போது அந்த வீடியோ ஆதாரத்துடன் அந்த ‘ரோமியோ’வை கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.