உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் – அலகாபாத் நெடுஞ்சாலையில் பார்ப்பவர் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
சாலையோரம் தனது லாரியை நிறுத்திவிட்டு, அதன் முன்பக்கத்தில் நின்றபடி கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு, எமன் பின்னால் ஒரு லாரி வடிவில் வருவான் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். அங்கிருந்த மற்றொரு லாரி திடீரென ‘ரிவர்ஸ்’ எடுக்கத் தொடங்க, அதை கவனிக்காத அந்த ஓட்டுநர் இரண்டு கனரக வாகனங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டார்.
📍Kanpur–Allahabad Highway, Uttar Pradesh: A truck driver cleaning his parked vehicle’s mirrors was crushed after another truck suddenly reversed, trapping him between the two vehicles. https://t.co/NL8SES5WpT
— Deadly Kalesh (@Deadlykalesh) February 22, 2026
“>
வெறும் 21 வினாடிகள் ஓடும் அந்தப் பதறவைக்கும் வீடியோவில், எந்த ஒரு முன்னெச்சரிக்கை ஒலியும் இன்றி பின்னால் வந்த லாரி, அந்த ஓட்டுநரை அப்படியே நசுக்குவது பதிவாகியுள்ளது. இரண்டு ராட்சத வாகனங்களுக்கு இடையில் சிக்கி அந்த இளைஞர் அசைவற்று விழும் காட்சி, நெடுஞ்சாலையில் செல்பவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்தச் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பார்ப்போரை நிலைகுலைய வைத்துள்ளது.
