இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்று ஆட்டத்திற்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தனது ரசிகர் ஒருவரிடம் கனிவாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன்னை சந்தித்த ரசிகர் ஒருவருக்கு நன்றியையும் ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் இஷான் கிஷன் பேசியது பலரின் இதயங்களை வென்றுள்ளது.

அந்த வீடியோவில், “நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் உண்மையில் நீங்கள்தான் எங்களை ஊக்குவிக்கிறீர்கள்” என்று இஷான் கிஷன் மிக உருக்கமாகக் கூறியுள்ளார். மைதானத்திற்கு வெளியே நடந்த இந்த நெகிழ்ச்சியான உரையாடல், கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே உள்ள ஆழமான பிணைப்பை வெளிப்படுத்துகிறது.

“>

மேலும் கடினமான போட்டிகளுக்குத் தயாராகும் வேளையிலும், ரசிகர்களின் அன்பிற்கு மதிப்பளித்து இஷான் கிஷன் காட்டிய இந்த எளிமையும் பெருந்தன்மையும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் நெகிழ்ச்சி தருணமாகப் போற்றப்பட்டு வருகிறது.