திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் வீரா. சாமிநாதன். இன்று அவரைச் சந்திக்க வந்த ஏரியோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர், சாமிநாதனுக்கு சால்வை அணிவிப்பது போல நடித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைத் திடீரெனக் குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சாமிநாதன் உடனடியாக மீட்கப்பட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய மணிகண்டனைப் பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலில் சாமிநாதனின் பெயர் முன்னிலையில் உள்ள நிலையில், இந்தத் தாக்குதல் அரசியல் உள்நோக்கம் கொண்டதா அல்லது தனிப்பட்ட விரோதமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
