உத்தரப்பிரதேசத்தில் மனதை உலுக்கும் ஒரு கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வயிற்றில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி, அங்கு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, நடந்ததைக் குறித்து விசாரித்தபோது, அந்த சிறுமி தன் நடுங்கும் உதடுகளால் சொன்ன உண்மை அனைவரையும் உறைய வைத்தது.

தங்கள் வீட்டு அருகே வசிக்கும் ஒரு முதியவர் (பக்கத்து வீட்டு தாத்தா), சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அச்சுறுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்த பயங்கரத்தால் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்த அந்த சிறுமி, இப்போது குழந்தையைப் பெற்றெடுத்த பின் குற்றவாளியைக் கைகாட்டியுள்ளார்.

இந்த புகாரைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அந்த முதியவரைத் தேடி வருகின்றனர்.

ஒரு முதியவரே பேத்தி வயது சிறுமிக்கு இப்படி ஒரு துரோகத்தைச் செய்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.