காலை உணவாக பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் ‘அவல், எந்த அளவிற்கு சுகாதாரமற்ற முறையில் பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகி வரும் 31 விநாடி வீடியோவில், மிகப்பெரிய அளவில் அவல் குவியல் குவியலாகத் தரையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அமர்ந்திருக்கும் இரண்டு தொழிலாளர்கள், எந்தவிதமான கையுறைகளோ (Gloves) அல்லது தலைக்கவசமோ இன்றி, வெறும் கைகளால் அவலை அள்ளி பாக்கெட்டுகளில் அடைக்கின்றனர். பின்னர் அங்கேயே வைத்து எடை போட்டு சீல் வைக்கின்றனர்.
சாதாரணமாக உணவகங்களில் கூட தரம் பார்க்கப்படும் நிலையில், விற்பனைக்கு வரும் பாக்கெட்டுகள் இவ்வளவு மோசமான சூழலில் தயாராவது அதிர்ச்சியை அளிக்கிறது. திறந்த வெளியில், தூசு மற்றும் அழுக்குகள் படியும் வகையில் தரையில் கொட்டி வைக்கப்பட்டிருப்பது உணவுப் பாதுகாப்பு விதிகளை அப்பட்டமாக மீறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
https://twitter.com/Deepeshpatel87/status/2023770501890642010?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2023770501890642010%7Ctwgr%5E536ff39d09ff2ffe4a073e713e89b31a5ccd9986%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tv9hindi.com%2Ftrending%2Fdo-you-also-eat-poha-for-breakfast-then-take-a-look-at-how-its-packaged-video-viral-on-social-media-3690891.html
X-ல் பகிரப்பட்ட இந்த வீடியோ சுமார் 2 லட்சம் பார்வைகளை நெருங்குகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்: “இதைப் பார்த்த பிறகு இனி அவல் சாப்பிடவே பயமாக இருக்கிறது” என ஒருவர் பதிவிட்டுள்ளார். “நாங்கள் சுத்தமானது என்று நம்பி வாங்குகிறோம், ஆனால் இவர்கள் சுகாதாரத்தைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை” என மற்றொருவர் சாடியுள்ளார்.
மேலும் “உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்களா? அல்லது அவர்களும் சேர்ந்துதான் பேக் செய்கிறார்களா?” என ஒருவர் கிண்டலாகவும் ஆவேசமாகவும் கேள்வி எழுப்பியுள்ளார். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்றாலே அது சுத்தமானது என்கிற பொதுமக்களின் நம்பிக்கையை இந்த வீடியோ சுக்குநூறாக்கியுள்ளது.
