தமிழகத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது விரிசல் விழுந்துள்ளது. “ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு, 40-க்கும் மேற்பட்ட தொகுதிகள், உள்ளாட்சித் தேர்தலில் 20% இடங்கள்” என காங்கிரஸ் வைத்த டிமாண்டுகளை திமுக ஏற்க மறுப்பதே இதற்குக் காரணம். குறிப்பாக, மாணிக்கம் தாகூர் எம்.பி மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் ‘அதிகாரத்தில் பங்கு’ வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது திமுக தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

​ஒருபுறம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை “தலைமைக்குக் கட்டுப்பட்டு நடங்கள்” என எச்சரித்தாலும், மாணிக்கம் தாகூர் தரப்பு தனது பிடியில் உறுதியாக உள்ளது. இந்த இழுபறிக்கு நடுவே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் இன்று சென்னை வந்துள்ளார். “குழப்பம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை” என திமுக கறாராகச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. இதனால் வேணுகோபால் – ஸ்டாலின் சந்திப்பு, இந்தக் கூட்டணியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.