பிரபல தென்னிந்திய நடிகை ஸ்ரீலீலா தனது மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து முறைப்படி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த இவர், நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் திரைத்துறைக்கு வந்தாலும், தனது கல்வியைக் கைவிடாமல் தொடர்ந்து படித்து வந்தார்.
தற்போது நடைபெற்று முடிந்த பட்டமளிப்பு விழாவில் அவர் பட்டம் பெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
2019-ல் கன்னடத் திரைப்பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீலீலா, ‘பகவந்த் கேசரி’ மற்றும் ‘குண்டூர் காரம்’ போன்ற தெலுங்குப் படங்களின் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழில் ‘பராசக்தி’ படத்தில் நடித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்ற இவர், அடுத்ததாக நடிகர் அஜித்குமாரின் 64-வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
திரையுலகில் பிஸியாக இருந்தபோதிலும் மருத்துவக் கனவை நனவாக்கியுள்ள அவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
