இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இந்திய வீரர்களுக்குச் சிறப்பு விருந்து அளித்தது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

2026 டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவை வீழ்த்திய உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, அடுத்ததாக நமீபியாவுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பாக டெல்லியில் பயிற்சி மேற்கொண்டு வரும் வீரர்களுக்காக இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

இந்த விருந்தின் போது இளம் வீரர் அபிஷேக் சர்மா மட்டும் பாதியிலேயே வெளியேறியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், இதற்குப் பின்னால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவிற்கு எதிரான போட்டிக்குப் பிறகு அபிஷேக் சர்மாவுக்கு லேசான காய்ச்சல் இருந்ததாகவும், டெல்லியின் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அவர் சற்று உடல்நலக் குறைவுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அடுத்த போட்டிக்கு முன்பாக முழு உடற்தகுதியைப் பெற வேண்டும் என்பதற்காக, சரியான ஓய்வு எடுக்கவே அவர் பயிற்சியாளர் கம்பீரிடம் அனுமதி பெற்று முன்கூட்டியே ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளார்.