தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியில் அதிகப்படியான உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் எனப் பல்வேறு வழிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் பெயர், முகவரி போன்ற வழக்கமான தகவல்களுடன், ஒரு விசித்திரமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

“நீங்கள் இதற்கு முன் எந்தக் கட்சியில் இருந்தீர்கள்? ஏன் அந்தக் கட்சியை விட்டு விலகினீர்கள்?” மற்றும் “எதிர்காலத்தில் விஜய் எவருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” போன்ற கேள்விகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

புதிய உறுப்பினர்களாகச் சேர வருபவர்களிடம் இப்போதே கூட்டணி குறித்துக் கேட்பதும், பழைய அரசியல் பின்னணியை மிகத் தீவிரமாக ஆராய்வதும் பல தொண்டர்களுக்குத் தயக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கட்சியில் ஊடுருவும் மற்ற கட்சி நபர்களைக் கண்டறியவும், அடிமட்டத் தொண்டர்களின் மனநிலையைத் தெரிந்துகொள்ளவுமே விஜய் தரப்பு இப்படி ஒரு ‘ஸ்கெட்ச்’ போட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.