தமிழகத்தில் வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பே, அங்கன்வாடி செல்லும் வாண்டுக்களுக்குத் தமிழக அரசு ஒரு ஜாலியான செய்தியைச் சொல்லியுள்ளது. வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஒரு முழு மாதத்திற்கு அங்கன்வாடி பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் சுட்டெரிக்கப் போகும் வெயிலின் தாக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

​இந்த விடுமுறை காலத்திலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் இதர வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஸ்கூலுக்குப் போகாமலே ஒரு மாசம் ஜாலியா இருக்கலாம் என்பதால் குழந்தைகள் மட்டுமில்லாமல், அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பெற்றோர்களும் இப்போதே சம்மர் பிளான்களைப் போடத் தொடங்கிவிட்டனர். குட்டி பசங்களா, உங்க கொண்டாட்டத்துக்குத் தேதியைக் குறித்து வச்சுக்கோங்க!