“சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடலாகத் தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது” என்றும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம் என்றும் அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து அரசியல் பெரும்பயணம் நீள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இதுவரை இல்லாத ஒரு புதிய அரசியல் சூழலைச் சுமந்து நிற்பதற்குத் தவெக-வின் அரசியல் வருகையே காரணம் எனச் சுட்டிக்காட்டிய அவர், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசமாகத் தமது இயக்கம் விளங்குவதாகக் கூறியுள்ளார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.
முதன்மை அரசியல் சக்தியாகப்…
— TVK Vijay (@TVKVijayHQ) February 2, 2026
“>
மேலும், தீர்க்கமான ஒற்றுமையுடனும், தேர்ந்த தேர்தல் நுட்பங்களுடனும் களம் கண்டு, மக்கள் ஆதரவுடன் அதிகார அங்கீகாரத்தை அடைவோம் எனத் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
