பீகாரில் உள்ள ஒரு பள்ளியில் குடியரசு தின விழாவைக் கொண்டாட மாணவர்கள் ஆர்வத்துடன் சென்றிருந்தனர். விழாவின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பூந்தி வாங்கிய ஒரு மாணவன், அந்தப் பேப்பரை உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அது அவன் பல மணிநேரம் கண் விழித்து எழுதிய செய்முறைத் தேர்வு (Practical Note) புத்தகத்தின் பக்கம் என்று!

“நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பிராக்டிகல் நோட்டை எழுதினேன் தெரியுமா? அதைத் திருத்தி மார்க் போடாமல், இப்படி பக்கங்களைக் கிழித்து எனக்கே அதில் பூந்தி தருகிறார்கள்” என அந்த மாணவன் வேதனையுடன் வீடியோவில் பேசியுள்ளார்.

“இந்த பிராக்டிகல் மார்க்குக்காக நான் 500 ரூபாய் லஞ்சம் வேறு கொடுத்தேன். காசையும் வாங்கிட்டு, நோட்டையும் கிழிச்சுட்டாங்களே” என அந்த மாணவன் குமுறுவது பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது.

இந்த வீடியோ வைரலானதும், “உழைப்பின் பலன் எப்போதும் இனிக்கும் என்பார்கள்.. இன்றுதான் அதை நேரில் பார்க்கிறோம் ” என நெட்டிசன்கள் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே சமயம், கல்வித்துறையில் நடக்கும் ஊழலையும், பொறுப்பற்ற தனத்தையும் பலரும் கடுமையாகச் சாடி வருகின்றனர்.