போஜ்புரி திரையுலகின் டாப் ஸ்டாரான பவன் சிங், எங்கு சென்றாலும் அங்கு ஒரு சர்ச்சையை ஏற்படுத்தாமல் இருக்க மாட்டார் போலிருக்கிறது. தற்போது ஒரு பிறந்தநாள் விழாவில் அவர் செய்த அதிரடி காரியம் இணையதளங்களை அதிரவைத்துள்ளது.

சமீபத்தில் போஜ்புரி பாடகர் குஞ்சன் சிங்கின் பிறந்தநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தனது காதலி என்று கிசுகிசுக்கப்படும் மஹிமா சிங்குடன் பவன் சிங் கலந்து கொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by abhayaryan148 (@abhayaryan148)

விழாவில் குதூகலமாக இருந்த சூழல், திடீரென வாக்குவாதமாக மாறியது. அங்கிருந்த சிலருடன் ஏற்பட்ட மோதலால் பவன் சிங் செம ஆவேசமடைந்தார். மற்றவர்கள் அவரைச் சமாதானப்படுத்த முயன்றும், அவரது கோபம் குறையவில்லை. அந்த ஆத்திரத்தை அடக்க முடியாமல், தான் அணிந்திருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கண்ணாடியை கழற்றி தரையில் போட்டு உடைத்து நொறுக்கினார்.

ஒரு சின்ன விஷயத்திற்காக இவ்வளவு விலை உயர்ந்த கண்ணாடியை உடைத்த அவரது செயல் அங்கிருந்தவர்களை உறைய வைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “ரூபாய் 1 லட்சத்தை இப்படி வீணாக்கிட்டாரே” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.