கோரக்பூரில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் ‘காதல்’ என்ற பெயரில் இளைய தலைமுறை எவ்வளவு தூரம் செல்கிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

8-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தினமும் நள்ளிரவில் தனது காதலனைச் சந்திக்கத் திட்டமிட்ட அந்தச் சிறுமி, அதற்குத் தடையாக இருந்த தனது பெற்றோருக்கு இரவு உணவில் ரகசியமாகத் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.

தினமும் இரவு உணவு உண்டதும் குடும்பமே மயக்க நிலைக்குச் செல்வதைக் கவனித்த தந்தை, ஒருநாள் இரவு தூங்குவது போல நடித்து மகளைக் கண்காணிக்கத் தொடங்கினார்.

அன்று இரவு 11:30 மணியளவில் சிறுமி போர்வையை நைஸாகப் போர்த்திக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அவரைப் பின்தொடர்ந்து சென்றபோது, சிறுமி பக்கத்து வீட்டு இளைஞருடன் தனிமையில் இருந்ததை ரகசியமாகப் பிடித்தார். விசாரணையில், அந்த இளைஞனே சிறுமிக்குத் தூக்க மாத்திரைகளை சப்ளை செய்ததும் அம்பலமானது.

ஏற்கனவே ஊர் பஞ்சாயத்தில் எச்சரிக்கப்பட்டும் அடங்காத அந்த இளைஞன், தற்போது சிறுமியின் தந்தையைக் கொலை செய்ய மிரட்டல் விடுத்துள்ளான். இதுகுறித்து குல்ரிஹா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய அந்த இளைஞரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.