கேரள மாநிலம் கோழிக்கோடு செருவனூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது ஆசிரியர் சஜீந்திர பாபு, தனது பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கு கொடுரராக மாறியுள்ளார்.

கடந்த ஜனவரி 4-ம் தேதி அந்த மாணவியின் பிறந்தநாளையொட்டி, பள்ளியில் வைத்து வாழ்த்து கூறிய அந்த ஆசிரியர், “உனக்கான பரிசு என் வீட்டில் இருக்கிறது, வந்து வாங்கிக்கொள்” என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

ஆசிரியரின் பேச்சை நம்பி, அவரது இருசக்கர வாகனத்திலேயே மாணவி வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்குச் சென்றதும் மாணவியைப் படுக்கை அறைக்கு வரவழைத்து அந்த ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

ஆசிரியரின் பிடியில் இருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து ஓடிவந்த மாணவி, சில நாட்களுக்குப் பிறகு தனது உறவினரிடம் இந்த ரகசியத்தைச் சொல்லவே விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

உடனே மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கோழிக்கோடு போலீஸார் ஆசிரியர் சஜீந்திர பாபுவைப் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

குருவாக இருக்க வேண்டியவரே ஒரு மாணவியின் எதிர்காலத்தைச் சிதைக்க முயன்ற இந்தச் சம்பவம் கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.