இந்தியாவின் சாலைகள் எவ்வளவு மோசமாக இருக்கின்றன என்பதை வெளிநாட்டு இளம்பெண் ஒருவர் சுட்டிக்காட்டி வெளியிட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாட்டின் தலைநகரான புது தில்லியில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் அந்த வீடியோவில், குண்டும் குழியுமான சாலைகளையும், பராமரிப்பற்ற உள்கட்டமைப்பையும் பார்த்து அந்தப் பெண் பெரும் அதிர்ச்சியடைகிறார். அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் மற்ற விவகாரங்களில் பிஸியாக இருக்கும் வேளையில், மக்களின் அன்றாடத் தேவையான சாலை வசதிகள் எவ்வளவு மோசமடைந்துள்ளன என்பதை இந்தக் காணொளி அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது.
"Foreigner girl exposed Indian roads." 🚨
While the govt and our political leaders are busy with hate politics, the roads in India are becoming more miserable.
The video is possibly from New Delhi and she looks shocked at the state of the roads. pic.twitter.com/xvYqGxnJVT
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) January 6, 2026
வளர்ச்சியைப் பற்றிப் பேசும் அதே வேளையில், அடிப்படை வசதியான சாலைகளின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வெளிநாட்டவர் வந்து சொல்லும் அளவிற்கு நமது சாலைகளின் நிலை இருப்பது வேதனைக்குரியது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாட்டின் பிம்பத்தைச் சர்வதேச அளவில் பாதிக்கும் இத்தகைய உள்கட்டமைப்புச் சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
