ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கிராமத்தில், தனது கள்ளக்காதலைத் தொடர்வதற்காக மகளையே பலிகடாவாக்கிய தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சுலோச்சனா பாரிக் (45) கணவரை இழந்தவர். இவருக்கு ஸ்வேதா (22) என்ற மகள் உள்ளார். ஸ்வேதா, உள்ளூர் மருந்துக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சுலோச்சனாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் பண்டா (35) என்பவருக்கும் நீண்ட காலமாக ரகசிய கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் விக்ரம் பண்டா, பாடி பில்டராகவும் அறியப்படுகிறார். இந்த கள்ளத்தொடர்பை இருவரும் யாருக்கும் தெரியாமல் மறைத்து வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சுலோச்சனா ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார். தனது மகள் ஸ்வேதாவை விக்ரம் பண்டாவுக்கு திருமணம் செய்து வைத்தால், அவருடன் எப்போதும் தொடர்பில் இருக்கலாம் என எண்ணி, மகளை சம்மதிக்க வைத்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு, ஸ்வேதா தனது கணவர் விக்ரமுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், சுலோச்சனா மகள் வேலை பார்த்து வந்த மருந்துக் கடைக்கு சென்று, ஸ்வேதாவின் நெருங்கிய தோழி ரியாவிடம் இருந்து ஆணுறை பாக்கெட் ஒன்றை கேட்டுப் பெற்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரியா, இந்த விஷயத்தை ஸ்வேதாவிடம் தெரிவித்தார். அதோடு, விக்ரம் பண்டாவுக்கும் சுலோச்சனாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதையும் அவர் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஸ்வேதா, உடனே தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்ததுடன், வெளியே விக்ரம் பண்டாவின் புல்லட் மோட்டார் சைக்கிள் நின்றிருந்ததை பார்த்துள்ளார். சந்தேகம் ஏற்பட்டதால், முன்பக்க கதவைத் தட்டாமல் பின்பக்க கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அங்கு படுக்கை அறையில், தனது கணவர் விக்ரம் பண்டாவுடன் தாயார் சுலோச்சனா உல்லாசமாக இருந்ததை கண்டு ஸ்வேதா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து மனமுடைந்து காவல் நிலையம் சென்ற ஸ்வேதா, தாயார் மற்றும் கணவர் மீது புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பல ஆண்டுகளாக சுலோச்சனாவுக்கும் விக்ரம் பண்டாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், அதனைத் தொடர்வதற்காக மகளையே திருமண பந்தத்தில் பலிகடாவாக்கியதும் உறுதியானது.
மேலும், சுலோச்சனாவின் செல்போனை ஆய்வு செய்த போலீசார், அவர் விக்ரம் பண்டா மட்டுமன்றி ராஜேஷ் சாகு (50) என்ற மற்றொரு நபருடனும் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை கண்டறிந்தனர். ராஜேஷ், சந்திப்பூரில் பெரிய செல்வந்தர் என கூறப்படுகிறது. விக்ரம் பண்டாவுக்கு பண உதவி வழங்குவதற்காக ராஜேஷுடன் சுலோச்சனா தொடர்பு வைத்திருந்ததும், அவரது மூலம் பணம் பெற்று விக்ரமுக்கு உதவி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
