உத்தரப்பிரதேசத்தில் மகளைப் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பிய தந்தை, மாரடைப்பால் பள்ளி வாசலிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான தாரிக் மேவதி என்பவர், தனது மூன்று வயது மகளைப் பள்ளியின் உள்ளே பத்திரமாக அனுப்பிவிட்டுத் திரும்ப முற்பட்டபோது, திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.
चलते-चलते थम गई ज़िंदगी
उत्तर प्रदेश के बुलंदशहर में बेटी को स्कूल छोड़ने आए तारिक की अचानक हार्ट अटैक से मौत हो गई।
यह सिर्फ़ एक खबर नहीं, बल्कि चेतावनी है,जब युवा भी यूँ ही गिरकर दम तोड़ रहे हैं, तब सवाल है: क्या ऐसी मौतों को रोकना सच में किसी की प्राथमिकता है?#breakingnews… pic.twitter.com/DKKVgPb6xn
— Nedrick News (@nedricknews) December 21, 2025
பள்ளி வாசலில் தந்தை மயங்கி விழுந்தபோது, எதுவும் தெரியாத அந்தச் சிறுமி பள்ளிக்குள் சென்றது பார்ப்பவர்களைக் கண்கலங்கச் செய்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகளைப் பள்ளியில் விட்ட அந்த நிமிடம் தான், அவரோடு அந்தச் சிறுமி செலவிட்ட கடைசி நிமிடம் என்பது எவராலும் நம்ப முடியாத துயரமாக மாறியுள்ளது.
